
யாழ்ப்பாணத்தில் கொரோனாப் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக மருத்துவ அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், யாழ். சிறைச்சாலையில் 43 பேர் உட்பட யாழ். மாவட்டத்தில் இன்று 52 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.