சாரதி அனுமதிப்பத்திர நடைமுறையில் ஏற்படவுள்ள மாற்றம்!SamugamMedia

மோட்டார் வாகனங்களை பதிவு செய்தல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்ளத் துறைசார் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது குறித்து தேவையான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கும் நிதி அமைச்சுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் வாகனப் பதிவு, ஒழுங்குமுறை, சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

செயல்முறைகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என போக்குவரத்து மற்றும் நிதி அமைச்சுக்கள் முன்னர் சுட்டிக்காட்டியிருந்தன.

Leave a Reply