
உக்ரைன், ஜனவரி 30
உக்ரைன் எல்லையில் குவித்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய துருப்பினர் குறித்து மேற்கத்திய நாடுகள் பீதியடைய வேண்டாம் என்று உக்ரைன் ஜனாதிபதி, வோலோடிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மூழ்கும் கப்பல் அல்ல என்று கூறிய அவர், படையெடுப்பு பற்றிய பேச்சுகள், நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆபத்தை விளைவிப்பதாகக் கூறியுள்ளார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே முழு வீச்சில் போர் ஏற்படும் சாத்தியத்தைத் தாம் நிராகரிக்கவில்லை என்றும், ஸெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், போர் ஏற்படும் சாத்தியத்தை அமெரிக்கா அளவுக்கு மீறி சுட்டிக்காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைனிலிருந்து இராஜதந்திரிகளை அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்ரேலியா ஆகியவை மீளப் பெற்றுக்கொண்டது தவறு என்றும், உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டார்.