இலங்கையில் சுனாமியாக பரவி வரும் ஒமிக்ரான் மாறுபாடு!

SARS-CoV-2 Coronavirus Variant Omicron cell delta on green background 2021 2022.

கொரோனாத் தொற்றானது சில நாட்களுக்கு முன்னரே சமூகமயப்படுத்தப்பட்டு தற்போது சுனாமியாக பரவி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பரவி வரும் ஒமிக்ரான் மாறுபாடு சில வழிகளில் சென்று பின்வாங்கும் என்று நம்பப்படுகிறது.

ஆனால் இது எப்படி நடக்கிறது என்பதை பார்க்க நாங்கள் காத்திருக்க நேரிட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற போதிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றவர்களில் அதிகமானவர்கள் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒமிக்ரான் வைரஸ் தற்போது பெரும்பாலும் அறிகுறியற்றதாக இருப்பதால், வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ளாமல் சமூகம் முழுவதும் நோயை பரப்புவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *