
அனுராதபுரம் – தம்புத்தேகம பகுதியில் ஆறு வயது சிறுமியின் மீது வாயிற் கதவு விழுந்ததில், சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்தார் என தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புத்தேகம முசல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.
சிறுமி ஆசிரியை ஒருவரின் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக ஆசிரியையின் வீட்டிலிருந்த வாயிற் கதவின் அருகில் வந்துள்ளார்.
இதன்போது சிறுமியின் தாய் வாயிற் கதவை திறக்க முற்பட்டபோது வாயிற் கதவு சிறுமியின் மீது விழுந்துள்ளது.
படுகாயமடைந்த சிறுமியை, தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரேதப் பரிசோதனைக்காக தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.