
வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தைச் சேர்ந்த திருமதி இளமதி சபாலிங்கம் நேற்றுமுன்தினம் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
அரச நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு, தபால் சேவைகள் அமைச்சு ஆகியவற்றில் மேலதிக செயலராகவும், செயலராகவும் பணியாற்றியவர்.
மேலும், ஆளுநரின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு மேலும் ஒரு உதவிச் செயலர், வடக்கு மாகாண பிரதம செயலரால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.