புத்தளம் கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ரஜவிகம பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
கருவலகஸ்வெவ ரஜவிகம பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய அதிகார முதியவன்சேலாகே உக்கு பண்டா என்பவரே குறித்த காடு யானைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தயசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்து சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.



