நாடாளுமன்றில் உணவுக்காக மாதாந்தம் 90 இலட்சம் செலவு – பால், முட்டைக்கும் தட்டுப்பாடு! SamugamMedia

நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவறையில் பால் மற்றும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்துக்கு உணவு விநியோகிக்கும் தரப்பினருக்கான கொடுப்பனவு வழங்கப்படாமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகின்றது.

இதேவேளை, மின்சாரம், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளமையினால், நாடாளுமன்றத்தில் உணவுக்கான செலவு 30 வீதத்தால் அதிகரித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் உணவுக்காக மாதாந்தம் சுமார் 90 இலட்சம் செலவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அது தற்போது ஒரு கோடியைத் தாண்டியுள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply