நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது: விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

கொழும்பு, ஜனவரி 31:

நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியது: நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று சில பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தவறான கருத்தை பரப்பி வருகிறார்கள்.

கடந்த ஒரு வருடத்தில் மேற்கொண்ட நெற்செய்கைக்கான பலாபலன்களை மக்கள் தற்போது அனுபவித்து வருகிறார்கள். மஹா பருவத்துக்கானவை அறுவடை இன்னும் தொடங்கவில்லை. இதனால், உணவுத் தட்டுப்பாட்டுக்கு இடமில்லை..

நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என இரசாயன உர நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரான பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் உள்நோக்கத்துடன் தெரிவித்துள்ளார். நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *