
கண்டி – கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹங்கொட பிரதேசத்தில் கொலைச் சம்பவம் ஒன்று நேற்று (30) இடம்பெற்றுள்ளது.
இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், ஒருவர் மற்றைய நபரின் கால்களை மரம் வெட்டும் இயந்திரத்தால் அறுத்து பலத்த காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளார்.
பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் சத்திரசிகிச்சையின் உட்படுத்தப்பட்டபோது, உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பொஹலியத்த – கலகெதர பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 54 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அநுர மீது முட்டை வீச்சு; பின்னணியில் அமைச்சர் ஒருவரின் சதி அம்பலம்