
ஐக்கிய மக்கள் சக்தி தற்போது மேலும் வலுவாகியுள்ளது,எமக்குள் ஒரு பிரச்சினையும் இல்லை என நாடளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று சமகி ஜன பல வேகய கட்சியில் பிரச்சினை இல்லை.அரசாங்கத்தில் தான் பிரச்சனை உள்ளது. சமகி ஜன பல வேகய இன்று ஒற்றுமையாகதான் உள்ளது.
தற்போது எமது கட்சி பல, வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. சரியான நேரங்களில் அதை நாம் செயற்படுத்துவோம்.
அதே போல இந் நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதற்கான தீர்வுகளை காண வேண்டும். பிரச்சனைக்கு தொடர்பானவர்கள் இதற்கான தீர்வைக் காணுங்கள்.
நாட்டை ஆள்வது 2/3 பங்கு வாக்குகளை அளித்து, 20 திருத்த சட்டத்தின் கீழ் நாட்டை ஆள்கிறார்கள். எனவே அவர்கள் நாட்டின் உள்ள பிரச்சினைகளிற்கு தீர்வுகளை காண வேண்டும்.
மின்சாரத்தை துன்டிப்பு ஏற்படுகிறது. நான் இன்று வரும் பொழுது கவனித்தேன் விக்டோரியா அணைகட்டு அங்கு நீர் இல்லாமல் வற்றி போய் உள்ளது.
மக்களிற்கு 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்க முடியாத அரசாங்கமாக காணப்படுகிறது.
சரியான முறையில் இச் செயற்பாட்டிற்கு தீர்வுகளை எடுத்துக் கொள்ள முடியாமல் இருக்கிறது.
நாட்டில் மின்சாரம் மட்டும் இல்லை சீமெந்து இல்லை கட்டிட வேலைப்பாடுகள் அப்படியே நின்று கொண்டு வருகிறது.அனைத்திற்கும் டொலர் பற்றாக்குறை முன் நிறுத்துகின்றனர்.
இந் நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். நாட்டில் நடக்கும் அசாதாரண நிலமை குறித்தும் சரியான முறையில் எடுக்க வேண்டும் -என்றார்.