திருமலையில் கோழி வளர்ப்பு தொடர்பான கருத்தரங்கு.!

ஊர் கோழி வளர்ப்பு தொடர்பான அறிவூட்டல் கருத்தரங்கு தளம்அமைப்பின் உப அமைப்பான “தளத்தின் கரம்” அமைப்பினால், “குவியம்” அமைப்பின் ஒத்துழைப்புடன், திருகோணமலையில் இடம்பெற்றது.

திருக்கோணமலை வள்ளுவர் கோட்டம் அறநெறிப் பாடசாலையில் கடந்த 29ம் திகதி காலை 9 மணி முதல் 12 மணி வரை இடம்பெற்றது.

இதன்போது திருமால்புரம், பெரியகுளம், வள்ளுவர் கோட்டம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்தரங்கின் வளவாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. இளந்திரையன் அண்ணன் அவர்கள் கலந்துகொண்டு, கோழி வளர்ப்பு தொடர்பான பல தகவல்களை வழங்கியிருந்தார்.

அடை வைக்கும் இயந்திரம், முட்டை தெரிவு செய்தல், அடைகாக்கும் செய்முறை, முட்டை தெரிவு, கோழிக்குஞ்சு பராமரிப்பு, கோழி தீவன உற்பத்தி, அசோலா வளர்ப்பு, உணவு புழு வளர்ப்பு, பிளாக் சொலிடர் ஈ வளர்ப்பு, சுருள் பாசி வளர்ப்பு, கோழிக்கு நோய் பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பான விளக்கங்களை தந்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *