சமுதாய மேம்பாட்டு துறையின் வன்னி பிராந்திய இணைப்பாளர் நியமனம்

கிளிநொச்சி, ஜனவரி 31:

பிரதமர் மஹிந்த ராஜபக்ச கேபினட் அமைச்சராகவும், ஜீவன் தொண்டமான் இராஜாங்க அமைச்சராகவும் உள்ள “சமுதாய மேம்பாட்டு” துறையின் வன்னி தேர்தல் தொகுதி இணைப்பாளராக பா. வினோத் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன கடிதத்தை, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் யாழ்ப்பாணத்தில் வைத்து வினோத்திடம் வழங்கினார்.

இது தொடர்பாக பா.வினோத் கூறுகையில் “வன்னி தேர்தல் தொகுதியில் சமுதாய மேம்பாடு எங்கெல்லாம் தேவைப்படுகிறது என்பதை அடையாளம் கண்டு அதை அமைச்சர் மற்றும் அமைச்சங்களின் பார்வைக்கு கொண்டு செல்வதுடன், அதற்கான தீர்வை பெற்றுக்கொடுத்தல் எனது பணியாகும்.

இதன் கீழ்,வாழ்வாதார உதவிகளை வழங்குதல், கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உதவிகளை பெற்றுக்கொடுத்தல், பேரிடர் கால நிவாரணங்களை பெற்றுக்கொடுத்தல்,மனிதவள மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவுள்ளேன். என் மீது நம்பிக்கை கொண்டு இச் சேவைக்கு என்னை தேர்ந்தெடுத்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *