மகிந்தவின் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் – வெளியான அதிர்ச்சித் தகவல்

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்திலும் பெண்களுக்கும் எதிரான வன்கொடுமை நடைபெற்றுள்ளதென அறியக் கிடைத்துள்ளதாக,நுகர்வோர் ,பெண்களை பாதுகாக்கும் சங்கத்தின் பிரதிநிதி மிலிந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்,

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

எங்களுடைய சங்கமானது எரிவாயு வெடிப்பு சம்பந்தமாக மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக எரிவாயு சம்பந்தமாக, நான் காலையில் வரும் வழியில் கண்டேன் மக்கள் எரிவாயு வரிசையில் நிற்கின்றனர்.

பெண் வன்முறை பற்றி கூறினால், பெண்களுக்கு எதிரான வன்முறை பிரதமர் அலுவலகத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

அங்குள்ள அதிகாரி பணத்தை கொள்ளையடித்துள்ளார். இவை அனைத்தும் நடந்து முடிந்த பின்னர் தான் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திற்கு செல்லும் பெண்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் .

ஆனால் பாராளுமன்றத்தில் கஞ்சா விற்று நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று கூறும் பெண்கள் தான் உள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க, சட்டம் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்.

எரிவாயு வெடிப்பு சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த காலங்களில் 5 லட்சம் இழப்பீடு வழங்க கோரியிருந்தோம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *