
யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கும்,வெளிவிவகார அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று மாவட்டச் செயலக கேட்ப்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில், வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ,பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரச அதிபர் க. மகேசன், மேலதிக அரச அதிபர் ம. பிரதீபன், மேலதிக அரச அதிபர் (காணி) S. முரளிதரன், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
