
74 ஆவது சுதந்திர தின விழா அணிவகுப்பில் 6 ஆயிரத்து 500 படை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இவர்கள் முப்படை, பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, இலங்கை சிவில் பாதுகாப்பு படை மற்றும் தேசிய கெடட் படையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் நாயக ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 3 ஆயிரத்து 463 இராணுவ வீரர்கள், 919 கடற்படை வீரர்கள், 804 விமானப்படை வீரர்கள், 336 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 282 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அணிவகுப்பில் இணையவுள்ளனர்.
இலங்கை சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 437 பேரும் தேசிய கெடட் படையைச் சேர்ந்த 259 பேரும் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொலிஸ் திணைக்களம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் படையினரும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.