ஐ.நா. அதிகாரிகள் கொலைவழக்கு; 51 பேருக்கு மரண தண்டனை

ஐ.நா. அதி­கா­ரி­களை கொலை செய்த வழக்­கில் 51 பேருக்கு மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள் ளது காங்கோ நீதி­மன்­றம். ஐக்­கிய நாடு­கள் சபை­யின் சிறப்பு அதி­கா­ரி­க­ளான மைக்­கேல் ஷார்ப் என்ற அமெ­ரிக்­க­ரும், சைடா கேட்­ட­லான் என்ற ஸ்வீடன் நாட்­ட­வ­ரும் கடந்த 2017 ஆம் ஆண்டு திடீ­ரென மாய­மா­கி­னர்.

இது­தொ­டர்­பாக நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யில், அவர்­கள் இரு­வ­ரும் ஆயு­தம் ஏந்­திய நபர்­க­ளால் வீதி­யில் தடுத்து நிறுத்­தப்­பட்டு, வய­லுக்கு அழைத்­துச் சென்று கொலை செய்­யப்­பட்­டமை தெரி­ய­வந்­தது.

இந்த சம்­ப­வம் தொடர்­பாக 50-க்கும் மேற்­பட்­டோர் கைது செய்­யப்­பட்டு விசா­ரணை நடை­பெற்­றது.

இந்த நிலை­யில், ஐ.நா. அதி­கா­ரி­க­ளைக் கொன்ற வழக்­கில் தொடர்­பு­டைய 51 பேருக்கு காங்கோ நாட்டு ராணுவ நீதி­மன்­றம் மரண தண்­டனை விதித்து தீர்ப்பு அளித்­துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *