காணாமல் போன கடற் தொழிலாளர்கள் விவகாரம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது: அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணம், ஜனவரி 31:

யாழ்ப்பாணம் வடமராட்சி வத்திராயனில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ள விவகாரம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி வத்திராயன் கடல் பிரதேசத்தில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில், வத்திராயனுக்கு திங்கள்கிழமை சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பவம் தொடர்பாக கேட்டறிந்திருந்தார்.காணாமல்போன கடற்றொழிலாளர்களின் வீட்டிற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குடும்ப உறவுகளை இழந்து தவிக்கும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனும் இந்திய அதிகாரிகளுடனும் பேசியுள்ளதாகத் தெரிவித்தார்.

முன்பதாக, கடந்த 27 ஆம் திகதி மாலை 4 மணியளவில் கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்களும் அவர்கள் பயணித்த படகும் காணாமல் போனது. அவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காணாமல் போன கடற்றொழிலாளர்களின் வலைகள் அறுக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்த விவகாரத்தில் இந்திய மீனவர்களை வத்திராயன் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *