
தமது நியமனங்கள் நிறுத்தி வைப்பதற்கு யார் காரணம் என வடக்கு சுகாதார பணிக்கு நியமனம் பெற்றவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.வடக்கு மாகாணத்திலே சுகாதார பணி ஊழியர்களாக நியமனம் வழங்கப்பட்டு,இதுவரை கடமைக்கு அமர்த்தப்படாத 389 பேர் இன்று வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடுவதற்காக ஒன்று கூடிய நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
இரண்டு வருடங்கள் எமது நியமனத்துக்கான கஸ்ரப்பட்டோம்.அதன் பின்னர் எமக்கான நியமனங்கள் வழங்கப்பட்டது.
ஆனால் தேர்தலை காரணம் காட்டி நியமனங்கள் நிறுத்தப்பட்டது.அதன் பின்னர் மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக சுமார் 10 மாதங்களாக போராடி வருகின்றோம்.
போராட்ட இடத்துக்கு வடக்கு அமைச்சர்கள்,அரசியல்வாதிகள் வந்து எம்மை சந்தித்துள்ளனர்.இது தொடர்பில் அரசுடனும் கதைத்துள்ளனர்.
நாமும் அண்மையில் ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டம் நடாத்தியிருந்தோம்அதன் பின்னர்,ஜனாதிபதி எம்மை பணிக்கு அமர்த்துமாறு உத்தரவிட்டார்.
ஆனாலும் இன்றுவரை எம்மை பணிக்கு அழைக்கவில்லை.ஜனாதிபதி கூறியும் பலன் இல்லை.
இந்த நியமனங்களை வடக்கு அரசியல் வாதிகள் தடுத்து நிறுத்துகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.