கடற்தொழிலையே நம்பி வாழ்கின்ற குடும்பங்களுக்கு நியாயமான தீர்வினை பெற்று கொடுப்பதற்கு உழைப்போம் – சிறிதரன் எம். பி.! SamugamMedia

கடற்தொழிலையே நம்பி வாழ்கின்ற 50000 குடும்பங்களுக்கு  நியாயமான தீர்வினை பெற்று கொடுப்பதற்கு உழைப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். 

இன்று வட மாகாணக் கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக  இடம்பெற்ற கலந்துரையாடலில் போது சமூகம்  ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,

முக்கியமாக கடந்த 22 ம் திகதி இந்திய மீனவர்களுக்கு இலங்கைக் கடற்பரப்பில் இரண்டு நாட்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதியளிப்பது தொடர்பில் அயலுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த கருத்துக்கு உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் எதிர்த்துக் கருத்துத் தெரிவித்த விடயத்தையும் இங்கு பகிர்ந்திருந்தோம். 

எக் காரணங்கொண்டும் இந்திய இழுவைப் படகுகள் எமது கடலெல்லைக்குள் வருவதற்கோ; இந்தியா மீனவர்களுக்கு எமது கடற்பரப்பில் அனுமதியளிப்பதில்லை என மக்கள் பிரதிநிதிகளாகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் மீனவ சங்கப் பிரதிநிதிகளும் இணைந்து முடிவொன்றை எடுத்துள்ளோம்.

அதற்காக இந்த மண்ணிலே கடற்தொழிலையே நம்பி வாழ்கின்ற 50000 குடும்பங்களின் தலைவிதிகளை நினைத்து அவர்களோடு இணைந்து  அவர்களுக்காக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவதோடு நின்று விடாது நியாயமான தீர்வினைக் காண்பதற்கு உழைப்போம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *