நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்பு! ஆரம்பிக்கப்பட்ட விசேட வேலைத்திட்டம் SamugamMedia

எதிர்காலத்தில் இலங்கையில் நிலநடுக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை மையம் மற்றும் கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய நிறுவனங்களையும் இணைத்து இந்த திட்டத்தை தயாரித்து வருவதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் கூறியுள்ளது.

மொனராகலை புத்தல பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட சிறிய நில அதிர்வுகள் காரணமாக அப்பகுதி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஜனக அஜித்பிரேம மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் தாக்கம் இலங்கையை பாதிக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு இந்தியா அறிவிக்கவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply