
நடிகர் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளி யான மாநாடு திரைப்படம் வெளியாகி பெரு வரவேற்பைப் பெற்றது.
நீண்ட நாள்களுக்கு பின் சிம்புவுக்கு வரவேற்பைக் கொடுத்த இப்படத்தில் எஸ்.ஜெ.சூர்யா வில்லனாக நடித்து கலக்கியிருந்தார். அவரது நடிப்பு படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் எஸ்.ஜெ .சூர்யா மற்றும் சிம்பு இணையவுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளன.
மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற ‘டிரைவிங் லைசன்ஸ்’ படத்தின் ரீமேக்கி லேயே சிம்பு மற்றும் -எஸ்.ஜெ.சூர்யா இணைந்து நடிக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.