மத்தள விமான நிலையம் ஊடாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய வசதி! SamugamMedia

கடந்த பெப்ரவரி மாதத்தில் மத்தள விமான நிலையம் ஊடாக 11,926 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிசெய்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (தனியார்) நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது 2022 பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 11.5% வளர்ச்சி என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த பெப்ரவரி மாதத்தில் 107,639 சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கையின் சுற்றுலாத் துறை பதிவு செய்துள்ளது.

இந்தநிலையில், அவர்களில் 11,926 சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு பெப்ரவரியில் மத்தள விமானம் நிலையம் ஊடாக வசதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 72 சர்வதேச விமான பயணங்களும், 6259 பயணிகளின் வருகைகளும் 5667 புறப்பாடுகளும் அடங்குவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு, கஸ்க்ஸ்தானின் SCAT ஏர்லைன்ஸின் முதல் விமானம், 188 சர்வதேச சுற்றுலாப் பயணிகளுடன் இன்று (6) மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது.

அதன்படி, இன்று 602 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளிலிருந்து இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

மொஸ்கோவை தளமாகக் கொண்ட ரஷ்யாவின் ரெட் விங்ஸ் ஏர்லைன்ஸ் , 414 சர்வதேச சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஏற்றிவந்ததுடன், அதே விமானத்தில் 407 சுற்றுலாப் பயணிகள் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்த போக்கு தொடருமானால், 2023 ஆம் ஆண்டு இலங்கைக்கு சிறந்த மீட்சி ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்றும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப சுற்றுலாத்துறை துணைபுரியும் எனவும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (தனியார்) நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply