
கடந்த 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின் இவர்கள் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு படு விமர்சியாக நடைபெற்றது.
இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தாலி எடுத்து கொடுத்து அவர் தலைமையில் திருமணம் நடத்தி வைத்திருந்தார்.
தற்போது சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றார். திருமணமான 6 மாதத்தில் முதல் முறை மனைவியை பிரிந்திருக்கின்றார்.
இது குறித்து அவரின் மனைவி உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவில், ஏப்ரல் மாதத்தில் படத்தில் இடம்பெற்ற ‘பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை’ என்ற பாடலை போட்டிருக்கிறார்.
திருமணமாகி ஆறு மாதத்தில் கணவனைப் பிரிந்த சோகத்தில் கன்னிகா பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கன்னிகா பதிவிட்டு இருக்கும் ஏப்ரல் மாதத்தில் பொய் சொல்ல இந்த மனசுக்கு என்ற பாடல் சினேகன் எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.