
யாழ். பருத்தித்துறை கடற்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 21 தமிழக மீனவர்கள் இரு படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை மீனவர்கள் தொழிலிற்குச் செல்ல முடியாதவாறு அண்மையில் வந்து தொழில் புரிவதால் பாதிக்கப்பட ட மீனவர்கள் 9 படகுகளில் சென்று இரு தமிழக மீனவர்களின் படகை மடக்கி கடற்படையினரிடம் பிரஸ்தாபித்த நிலமையில் சம்பவ இடத்திற்குச் சென்ற கடற்படையினர் இரு ட்ரோலர் படகுகளில் இருந்த 21 மீனவர்களை படகுகளுடன் கைது செய்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
இவ்வாறு கொண்டு வரப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரும் இன்று நீரியல்வளத் திணைக்களம் ஊடாக நீதிமன்றில் முற்படுத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.