இரண்டாவது நாளாக தொடர்ச்சியாக ஆயிரம் பேருக்கு கூடுதலாக கொரோனா

கொழும்பு, பெப்ரவரி: நாட்டில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏறக்குறைய இரண்டு வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு சராசரியாக 800 ஆக இருந்தது. ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,056 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், திங்கள் கிழமை 1,082 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், வெளிநாடுகளில் இருந்து நாட்டை வந்தடைந்த 06 பேர் அடங்கும்.

இதன்மூலம், நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 611,185 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 17,312 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,441 ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *