
நிந்தவூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று இரவு (31) நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நிந்தவூரில் இன்று இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொருவரை தேடி சென்றுள்ளனர்.
அந்த வேளை தம்வசம் வைத்திருந்த துப்பாக்கியால் தேடி வந்தவர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த துப்பாக்கி சூட்டின் போது காயமடைந்த நபர் தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .