
தலங்கம வடக்கு பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மாலபே – தலங்கம வடக்கு பகுதியில் நேற்று (31) மாலை இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவருக்கு இடையிலான தகராறு முற்றிய நிலையில், சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் பலத்த காயமடைந்த குறித்த நபர் கொஸ்வத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை மாலபே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வருடம் முழுவதும் 75 ரூபாவுக்கு தேங்காய் பெற்றுக்கொள்ளலாம்! எங்கு தெரியுமா?