
அவசரமாக மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய வேண்டுமென அழுத்தம் கொடுப்பவர் யார்? என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்கள் மத்தயில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மின்சாரத்தை அவசரமாகக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை வெறும்கண்துடைப்பே.
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தட்டுப்பாடு குழறுபடிகளைக் காண்பித்து, அவசரமாக மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய இலங்கை மின்சாரசபை முயல்கிறது.
84.5 ரூபாய்க்கு ஒரு அலகு மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய இலங்கை மின்சாரசபை தயாராகி வருவதாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மின்சாரத்தை அவசரமாகக் கொள்வனவு செய்யும் பட்சத்தில் அதில் ஊழல், மோசடிகள் இடம்பெறலாம்.
இவ்வாறு அவசரமாக மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய வேண்டுமென அழுத்தம் கொடுப்பவர் யார்? என மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.