இந்திய மீனவர்களாலேயே வத்திராயன் மீனவர்கள் படுகொலை! மருதங்கேணி பிரதேச செயலகம் முற்றுகை

வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பிரதேச செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களால் கொலை செய்யப்பட்ட மீனவர்களிற்கு நீதிவேண்டி மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் இடம்பெறுகின்றது.

இந்திய மீனவர்களாலேயே வத்திராயன் மீனவர்கள் கொல்லப்பட்டதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்தும், கொல்லப்பட்ட மீனவர்களிற்கு நீதி கோரியும் இன்று காலை 7 மணி தொடக்கம் மருதங்கேணி பிரதேச செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

வத்திராயனில் இருந்து கடந்த 27ஆம் திகதி கடலிற்கு சென்ற இரு மீனவர்களும் இந்திய ட்ரோலர் படகில் மோதி உயிரிழந்தபோதும் எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

இதன் காரணமாக, செயலகம் முன்பாக வீதியில் அமர்ந்து உயிரிழந்த சக மீனவனின் உருவப்படங்களைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *