
கொழும்பு, பெப்ரவரி 1: நிகழாண்டில் ஜி.சி.ஜி. உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு டியூசன் வகுப்புகள் எடுப்பது திங்கள்கிழமை முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
2021 (2022) உயர்தரப் பரீட்சை வரும் பிப்ரவரி மாதம் 07 ஆம் திகதி முதல் மார்ச் 05 ஆம் திகதி வரை 2,438 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. நிகழாண்டில், 345,242 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
இந்நிலையில், இவர்களுக்கான டியூசன் வகுப்புகள், மாதிரித் தேர்வுகள் உள்ளிட்ட தேர்வு தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் பிப். 01 ஆம் தேதி நள்ளிரவு முதல் மார்ச் 05 ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளன.
இதற்கான அறிவிப்பை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

