
கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார, முன்பிள்ளைக்கல்வி, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் எம்.சி.எல். பெர்னாண்டோ ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று (31) நடைபெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளா், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர், விளையாட்டு திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர், கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர்கள், கல்வி அமைச்சின் மாகாண திட்டமிடல் பணிப்பாளா், கல்வி அமைச்சின் பாடசாலைகள் வேலைகள் பிரிவின் பிரதான பொறியியலாளர், மூதூர் வலயக்கல்விப்பணிப்பாளா் மற்றும் அமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தா்கள் பலரும் கலந்து கொண்டனர்.


