
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வரக்காபொல பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் இரண்டு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த மோதல் சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது.
ஒரு பொலிஸ் தரப்பினர் 30 ஆம் திகதி இரவு இறம்புக்கனை பிரதேசத்தில் நடந்த திருமண வைபவத்தில் கலந்துக்கொண்டு விட்டு திரும்பும் வழியில் வாகன போக்குவரத்து சம்பந்தமாக மற்றுமொரு பொலிஸ் தரப்புடன் தகராறை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.
சம்பவம் நடந்த போது இரண்டு தரப்பினரும் சாதாரண உடையில் இருந்துள்ளனர்.
இச் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.