ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் பாராளுமன்றிற்கு வருகைத் தந்துள்ளார்.
இன்றைய தினம் ஜனாதிபதி பாராளுமன்றில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவிருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் கடனுதவியைப் பெறுவதற்கான நடவடிக்கை தற்போது எந்த மட்டத்திலுள்ளது என்பதை நாட்டுக்கு விளக்கும் வகையில் அவரது இந்த அறிவிப்பு அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.