திடீரென வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா!

ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த அவருடைய அதிகபூர்வ இன்ஸ்டாகிராம் பதிவில், ‘தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நான் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, திருமணம் செய்துக்கொண்டு 18 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நிலையில் நடிகராக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அண்மையில் இருவரும் பிரிந்தனர். இருப்பினும், ஐஸ்வர்யா சமூக வலைதளங்களில் அவரது பெயரை ஐஷ்வர்யா ஆர். தனுஷ் என்றே வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *