உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை எதிர்பாராதளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் வரையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 81 – 83 டொலருக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு மசகு எண்ணெய் பீப்பாயின் விலை 91 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்மாதத்தில் மசகு எண்ணெய் விலை குறைவடையலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், விலை அதிகரிப்பு காரணமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நாடுகள் சிக்கலுக்குள் தள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *