குப்பை கூழங்களால் நிறைந்துள்ள யாழின் முக்கிய பகுதி!SamugamMedia

யாழ்ப்பாணம் முற்றவெளி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொலித்தீன் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் யாழ் முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்ற கண்காட்சியின்  கழிவுப் பொருட்களே பல்வேறு இடங்களிலும் தேங்கியிருக்கின்றது.

இந்நிலையில் குறித்த கழிவுப் பொருட்கள்  பல்வேறு இடங்களில் தேங்கி காணப்படுவதால் பல்வேறு நோய்த் தாக்கங்கள் ஏற்படவாய்ப்புள்ளதாகவும் எனவே உரிய தரப்பினர் உடனடியாக அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply