இலங்கையில் மதவாதம் வளர்வதை ஊக்குவிக்கக் கூடாது! – அர்ஜீன் சம்பத் தெரிவிப்பு SamugamMedia

இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்து வருவதாக தமிழக இந்துமக்கள் கட்சியின் நிறுவுனர் அர்ஜீன் சம்பத் இலங்கைக்கு விஜயம் செய்த போது தெரிவித்திருந்தார்.

வவுனியாவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போது பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ள இலங்கைக்கு சர்வதேச நாடுகளிலிருந்து பல்வேறு உதவிகள் கிடைத்தவண்ணமுள்ளன. அதேபோல் இந்திய அரசும் இலங்கைக்கு பெருமளவிலான உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. 

கொழும்பில் ஒரு கலாசார மண்டபத்தை அமைத்து அதன் நிர்வாகத்தை அவர்களே வைத்துள்ள நிலையில் இந்திய அரசால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாசார மண்டபத்தை யாழ் மாநகர சபையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் மாறாக இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மதவாதமானது மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. இங்கு வசிக்கும் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் மண்ணின் மைந்தர்கள். 

ஆனால்  இங்கு வெளிநாடுகளிலிருந்து வந்து மதமாற்றச் செயறபாடுகள் இடம்பெறுகின்றன. இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் உலகையே உலுக்கியது. எனவே மதவாதம், இனவாதம், ஆயுதகலாசாரம் என்பன முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அமைதியான வளமான நாடாக இலங்கையை உருவாக்க வேண்டும்  என்றார்.

இதேவேளை, இந்தியா தமிழ்நாட்டிலிருந்து இலங்கை சிவபூமிக்கு ஆன்மீக பயணமாக  சிவன் ராத்திரியை முன்னிட்டு வருகை தந்த தலைவர் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் அவர்களுக்கும், தந்த சனாதன சேவா சஸ்த்தான் தேசிய தலைவர் அரசியல் விமர்சகர் வி.எஸ். இராமன் அவர்களுக்கும் நினைவுச் சின்னம்  வவுனியாவில் வரவேற்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply