வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை தினம் அனுஸ்டிப்பு!SamugamMedia

திருவள்ளுவர் குருபூசை தினமான இன்று வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையடியில் குருபூசை தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது, திருவள்ளுவர் சிலைக்கு  மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.  அவர் தொடர்பான நினைவு பேருரையினை தமிழருவி சிவகுமாரன் நிகழ்த்தியிருந்தார். 
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் உபநகரபிதா சு.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன், ஓய்வுநிலை விரிவுரையாளர் நா.பார்த்தீபன், நகரசபை ஊழியர்கள், தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply