அரசியலில் மீண்டும் குழப்பம்: திடீரென முக்கிய நாட்டிற்கு செல்லும் மஹிந்த!SamugamMedia

நாட்டின் பொருளாதார சீர்குலைவுக்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தடையை நீக்குமாறு மஹிந்த ராஜபக்‌ச தமது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றைக் கோரினார்.

ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையில் தென்கொரியாவில் நடைபெறவுள்ள மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கி வெளிநாட்டு பயணத்தடையை நீக்கியது.

Leave a Reply