சுகாதார ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கிய சாவகச்சேரி வைத்தியசாலை!SamugamMedia

தென்மராட்சி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் இன்று சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 6.00 மணி முதல் நாளை காலை 6.00  இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், சுகாதார ஊழியர்கள் இந்த சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவு தவிர்ந்த ஏனைய பிரிவுகளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 இதன் காரணமாக சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

Leave a Reply