யாழில் இலவசமாக கண் சத்திர சிகிச்சை- வெளியான விசேட அறிவிப்பு!SamugamMedia

யாழ் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளிகளுக்கு யாழ் போதனா
வைத்தியசாலையில் நன்கொடையாளர்களின் உதவியுடன் இலவசமாக கண் சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான நோயாளர்களைத் தெரிவுசெய்யும் கண்பரிசோதனை முகாம்கள் பின்தங்கிய பிரதேசங்களில் ஒழுங்குபடுத்தப்படவுள்ளன. இதன்பிரகாரம் எதிர்வரும் 11.03.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் இரண்டாவது கண்பரிசோதனை முகாம் வேலணை பிரதேச வைத்தியசாலை மற்றும் மருதன்கேணி பிரதேச வைத்தியசாலை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

எனவே கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ள நோயாளர்கள் மேற்படி கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு
செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

Leave a Reply