
இலங்கையில் பங்குச் சந்தையுடன் தொடர்புடைய 75 வர்த்தக நிறுவனங்களின், வருடாந்த வெளிப்படையான அறிக்கையிடல் மத்திம (middle ) நிலையில் காணப்படுவதாக “Transparency international Srilanka ” அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பின் போதே குறித்த அமைப்பின் பிரதிநிதி பிரியா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கையில் காணப்படும் நிதி மற்றும் வர்த்தக நிறுவனங்களின் வெளிப்படையான அறிக்கையிடல்,தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 75 நிறுவனங்கள் உள்வாங்கப்பட்டன.
குறித்த நிறுவனங்கள் பங்குச் சந்தையுடனும் தொடர்புடைய நிறுவனங்கள். இவற்றுக்கு 0 தொடக்கம் 10 வரை புள்ளிகள் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த நிறுவனங்களின் புள்ளிகள் 6.93 என்ற அடிப்படையில் காணப்படுகின்றன.
ஒரு நிறுவனம் வெளிப்படையான வருடாந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராக நிறுவனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை, நிதி சார் வெளிப்படையான அறிக்கையிடல் ,வரி ,வருமானம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் வெளிப்படையான அறிக்கையிடலில் ஜோன்ஸ் ஸ்கில்ஸ் கூட்டு நிறுவனம் முதலிடத்தையும்,கொமர்ஷியல் வங்கி இரண்டாம் இடத்தையும்,டயலொக் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
அவர்கள் ஒப்பீட்டளவில் சிறப்பான அறிக்கையிடலை வெளியிட்டு முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர் என்றார்.