சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்த 06 வயது சிறுமி – தாய், கள்ளக்காதலன் கைது! SamugamMedia

கடந்த 7 ஆம் திகதி பிங்கெல்லா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் 06 வயது சிறுமியின் சந்தேகத்திற்குரிய மரணம் குறித்து ஹிரானா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தனது பெற்றோருடன் வசித்து வந்த குறித்த சிறுமி பல நாட்கள் நோய்வாய்ப்பட்டதாகவும் மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னர் பல சந்தர்ப்பங்களில் சிறுமி தனது தாயின் கணவரால் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், கேட்கும் பேச்சு குறைபாடுள்ள சிறுமியின் உடலில் பல வடுக்கள் மற்றும் வீக்கங்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் 25 வயதான தாய் மற்றும் 29 வயதான கணவர் ஆகியோர் மரணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply