இந்திய முட்டைகளை இராணுவத்தினருக்கு வழங்கி சோதிக்கப்பட்டதா? SamugamMedia

இன்று வரை ஒரு முட்டை கூட நாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் இன்று(08) தெரிவித்தார்.

முட்டை இறக்குமதிக்காக உலகின் அதிகூடிய சான்றிதழை இலங்கை கோரியுள்ளதாகவும், அந்த சான்றிதழின் பிரகாரம் இந்தியாவில் உள்ள நிறுவனம் ஒன்று முட்டைகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சோதனையிட முதலில் இராணுவத்தினருக்கு உணவளிக்கப்பட்டதாக அப்பட்டமான பொய்யான கதை பரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அது தொடர்பில் சட்ட திணைக்களம் நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

எதிர்கட்சியினர் எனக்கு சேறு பூசுகின்றனர். எனக்கு சேறு பூசுவதால் கோழி முட்டியிடாது எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த நாட்டில் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டால், முட்டைகளை இறக்குமதி செய்வது மட்டுமன்றி நாட்டு மக்கள் வாங்கக்கூடிய பொருட்களையும் வழங்குவது வர்த்தக அமைச்சின் பொறுப்பாகும் என்றும் நளின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்

Leave a Reply