இலங்கையிலுள்ள எந்தவொரு மகளீருக்கு சுதந்திரம் என்பது இல்லை என முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினமான இன்றையதினத்தை கறுப்பு தினமாக கடைபிடித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ம.ஈஸ்வரி இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இலங்கையில் பெண்களுக்கான நீதி மற்றும் சுதந்திரம் கிடைக்கும் வரையில் காணமால் ஆக்கப்பட்ட உறவுகள் இந்த மகளிர் தினத்தை கறுப்பு தினமுhகவே தொடரவுள்ளதாக ம.ஈஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைகுழு என்பது மனிதர்களின் ஒவ்வொரு பிரச்சனைகளையும் தீர்பதற்காகவே உருவாக்கப்பட்டதாகவும் ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனித உரிமைகள் ஆணைகுழுவினர் தமமுடன் கதைத்திருந்தாகவும் எனவே வடக்கு கிழக்கில் இராணுவம் நிலையாக நிலைகொள்ள வேண்டுமென ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளதாக ம.ஈஸ்வரி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் தாங்கள் வடக்கு கிழக்கில் இராணுவம் தேவையில்லை என வலியுறுத்தும் போது மனித உரிமைகள் ஆணைகுழு இவ்வாறான அறிக்கையை வெளியிட்டதை வன்மையாக கண்டிப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி ம.ஈஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.