எம்.பி. ஆகிறார் ஜனக ரத்நாயக்க! SamugamMedia

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அரசியல் கட்சி ஒன்றின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின்போது மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், அரசியலில் ஈடுபட்டிருப்பதால் அவரைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply