குடிப்பழக்கம் இல்லாததால் குழம்பிய சம்மந்தம்- யாழ், சாவச்சேரியில் நடந்த உண்மைச் சம்பவம்! SamugamMedia

யாழ்ப்பாணம், சாவச்சேரியில் குடிப்பழக்கம் இல்லாததால் சம்மந்தம் ஒன்று குழம்பியுள்ளதாக  கூறப்பட்டுள்ளது.

அண்மையில் கொக்குவிலை சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு, சாவச்சேரியில் தரகர் மூலம் பெண் பொருந்திய நிலையில், கடந்த வாரம் பெண்வீட்டிற்கு பெண்பார்க்கச் சென்றுள்ளனர்.

கதை வழக்கில் மாப்பிள்ளை தண்ணி அடிப்பாரா என கதை வந்துள்ளது.*

மைலோ மட்டுமே குடித்து பழகிய மாப்பிள்ளை.. ச்சே ச்சே… நான் குடிக்கிறதே இல்லை என பெருமையாக கூறியுள்ளார்.*

அதன்போது மணப் பெண்ணின் தாயார், “இந்தக் காலத்தில் குடிக்காதவனெல்லாம் ஆம்பிளையா” என நக்கலாக கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த மாப்பிள்ளைவீட்டார் சம்பந்தத்தை குழப்பிக்கொண்டு வெளியேறியுள்ளனர்.*

தனது ஒழுக்கமாக வாழ்க்கைக்கு கிடைத்த பரிசு இது தானா என மாப்பிள்ளை வருந்தி வருகிறாராம்.

Leave a Reply