குளத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞனை தாக்கிய முதலை: திருமலையில் சம்பவம்!SamugamMedia

திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்திலுள்ள அல்லைக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் முதலை தாக்குதலுக்குள்ளாகி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இச்சம்பவம் புதன்கிழமை(08) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர் அல்லைக்குள கட்டில் இருந்து குளித்து கொண்டிருந்தபோது முதலை அவரது காலினை இழுத்துக் கொண்டு குளத்திற்குள் கொண்டு செல்ல முற்பட்டபோது குறித்த இளைஞர் முதலையை உதறித் தள்ளிவிட்டு கரையை நோக்கி  ஓடி உயிர்தப்பியுள்ளார்.
இதன்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
முதலை தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த இளைஞன் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

Leave a Reply