
மின்கட்டணத்தின் தொடர்ச்சியான அதிகரிப்பு, பொருட்களின் விலையேற்றம் நடுத்தர மற்றும் பாமர மக்களைப் பெரிதும் பாதித்துள்ளன. மூன்று வேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் அல்லலுறும் எண்ணற்ற குடும்பங்களின் கவலைக்கிடமான தகவல்கள் ஜம் இய்யாவுக்குக் கிடைத்த வண்ணமுள்ளன. எனவே தனவந்தர்கள் பரோபகாரிகள் வசதிபடைத்தோர் தங்களாலான உதவிகளை வழங்கவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சமூக சேவைப்பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.